நீட் தேர்வுக்குப் பின், 2017,2018,2019-ம் ஆண்டுகளில் தமிழ்வழி மாணவர்களின் 158 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* மதுரை எம்பிக்கு கொரோனா.
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். இவர் கொரோனா தொற்றுக்காலத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சமீபத்தில் இவருக்கு திடீரென்று உடல் சோர்வு ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை, கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து, மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்.30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம், செங்கை மாவட்டங்களில் மிலாது நபி வரும் அக். 30-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அன்றைய தினத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும் என அந்த அறிக்கையில் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
* சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு. சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும், சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ.5 லட்சமும் வங்கிக்கடன் பெறலாம். இதற்கு 25 சதவீதம் மானியமும் உண்டு. விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி), பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 ஆகும்.
இந்தத் திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 285 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி, சேவை, விற்பனை தொழில்கள் செய்ய விரும்பும் தகுதியான நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோர் கிண்டிதொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 9487239561 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மதுரை மாவட்டம் முருகனேரி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்"
“படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்"-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
“பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்"
பட்டாசு ஆலை விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது - முதலமைச்சர்.
* சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு:அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 2015 முதல் 2019 வரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை 1,205.
2015, 2016-ம் ஆண்டுகளில் மட்டும் 1,047 பேர் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்குப் பின், 2017,2018,2019-ம் ஆண்டுகளில் 158 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். - மருத்துவக் கல்வி இயக்ககம்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தையும் இன்னும் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.
7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகை அருகே நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,600க்கு விற்பனை.
* விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. - மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* பண்டிகை நாளை முன்னிட்டு இன்று மாலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், ஆர்.பி.எப் மற்றும் ஜி.ஆர்.பி இணைந்து fortress checking செய்ய உள்ளனர்.
* 2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை மத்திய அரசு அறிவிப்பு.
வீடு, வாகனம், தனிநபர், கல்விக் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தும். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்தது மத்திய அரசு. கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்துவதில் விலக்கு பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்த விவகாரம்.
* ஊரடங்கு நீட்டிப்பு, திரையரங்கம் திறப்பு, புறநகர் ரயில் இயக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 28தேதி உரையாற்றுகிறார்.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, மேலும் 3மாதம் அவகாசம் நீட்டிப்பு. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, மேலும் 3மாத அவகாசம் வழங்கியது தமிழக அரசு. ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் இன்றோடு முடிந்த நிலையில், 9வது முறையாக அவகாசம் நீட்டிப்பு.
* தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மணல் திருட்டை தடுக்கக் கோரி பொதுநல வழக்கு. சட்ட விரோத மணல் குவாரிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சட்ட விரோத மணல் குவாரி - நீதிமன்றம் உத்தரவு; மணல் திருட்டுக்கு அதிகாரிகள் உடந்தை என மனுதாரர் புகார். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* தேர்தல் நேரத்தில் அரசின் நடவடிக்கைகளை பா.ம.க. தலைவர் ராமதாஸ் விமர்சிப்பது வழக்கம்தான். - அமைச்சர் கடம்பூர் ராஜு.
* 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம். பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிப்பு.
* உதவும் உறவுகள் குழு மூலம் இறந்த காவலர் சிவகுமார் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய சக காவல் நண்பர்கள் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த காவலர் சிவக்குமார் இவர் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்தார், கடந்த சில மாதங்கள் முன்பு உடல்நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவி செய்ய சிவகுமாருடன் காவலர் பயிற்சி மேற்கொண்ட 2006 ஆண்டு காவலர்கள் தமிழகம் முழுவது பணியாற்றி வருகின்றனர், உதவும் உறவுகள் என்ற டெலிகிராம் குழு மூலம் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தன்னுடன் பயிற்சியில் இருந்த காவலர்கள் சிவக்குமார் குடும்பத்திற்கு உதவி செய்ய முடிவெடுக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக ஏழாவது பங்களிப்பாக சிவகுமாரின் குடும்பத்தாருக்கு நிதி சேர்த்து இறந்த காவலர் மகன் மற்றும் மகளுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது இதைப்போன்று சிவகுமாரின் மனைவி ரூ 3,11,123, சிவகுமாரின் பெற்றோருக்கு ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 12,11,123 நிதியையும் சிவகுமார் உடன் பயிற்சி பெற்ற காவலர்கள் சிவகுமாரின் குடும்பத்தாருக்கு வழங்கினார், சிவகுமாரின் மனைவிக்கு தகுதிகேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
* வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கும். தமிழக அரசு அரசாணை வெளியீடு!.
No comments