Header Ads

சென்னை காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதி வழங்கினார்


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னையில் கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் உள்ளிட்ட மொத்தம் 23 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு, தமிழக அரசு NDRF மூலமாக ஒரு நபருக்கு தலா 3 முகக்கவசங்கள் (6 அடுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடியது), 5 திரவ சுத்திகரிப்பான் பாட்டில்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு கேடயம் (Face Shield) அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படுகிறது. 

இன்று 08.10.2020 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி, மேலும் கடந்த செப்டம்பர் மாதம் அலுவலக வளாகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த அலுவலக கண்காணிப்பாளர் (Superintendent) திரு.கே.பாண்டியன், உதவியாளர்கள் (Assistants) திரு.பி.ராஜபாண்டி மற்றும் ஏ.அருணாச்சலம் ஆகியோருக்கு ரூ.2,000/- பணவெகுமதி மற்றும் சுழற்கேடயம் வழங்கினார்.

No comments

Powered by Blogger.