Header Ads

லீடர் தமிழின் கல்விச் செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

*12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம், பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு 


* இன்று  நடைபெறவிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு.


*2020-21-ம் கல்வியாண்டிற்கான 1 முதல் மேற்படிப்புகள் வரை பயிலும்  சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் 31.10.2020-ற்குள் விண்ணப்பிக்கலாம்.


* வெளி மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் Student Admission-ல் நேரடியாகப உரிய வகுப்பில் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் போலிப் பதிவுகளைத் தடுக்க, மாணவரது விபரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட பின், சார்ந்த பள்ளியின் Student List-ல் வெளியாகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


* அண்ணாமலைப் பல்கலை.யில் தொலைதூரக் கல்வி வாயிலான இரண்டாண்டு B.Ed., சேர்க்கை தொடங்கியுள்ளது.


* அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், அவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது 


* அரசு தேர்வு இயக்ககத்தால் எந்த ஆண்டு முதல் கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்னை சான்று வழங்கப்படுகிறது என RTI -இல் கேட்கப்பட்ட கேள்விக்கு 1994-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுவதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.


* தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் தேர்வு நிறுத்திவைப்பு 


* M.Phil , Ph.D - 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய ஈரோடு  CEO உத்தரவு.


* ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ர சிக்ஷா  இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இனையவழி‌ மூலம் இன்னோவேட்டிவ் பாதசாலா என்ற தலைப்பின் கீழ் புத்தாக்க பயிற்சியினை வழங்கி வருகிறது.


* அரசின் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வழங்க கடைசி நேரத்தில் மறுக்கப்படுவதாக தனியார் பள்ளி  மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திருச்சி  மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். 


* புதுச்சேரியில் நேற்று  பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை புரிந்தாலும் ஆர்வமுடன் பங்கேற்றனர் 


* தமிழகத்தில் நேற்று  கொரோனா தொற்றால் மேலும் 5,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு 6,35,855 ஆக அதிகரித்துள்ளது.


* மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.

No comments

Powered by Blogger.