லீடர் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு. அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் அமலாக்கத்துறை நடவடிக்கை. திமுக எம்.பி. கவுதமசிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு. கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு.
* ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி திருப்பம்; முதல் முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,384 குறைவு: சவரன் ரூ. 37,440-க்கு விற்பனை.
* சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சைதை சட்டமன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியன் அவர்களுடைய இளைய மகன் அன்பழகன் (34) அவர்கள் கொரோனா பாதிப்பால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்..
* அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? அ.தி.மு.க எங்களுக்கு நெருக்கமான கட்சி இரண்டு தேர்தலை கூட்டணி வைத்து சந்தித்துள்ளோம் . ரஜினியுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை அவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை, இன்னும் நேரம் இருக்கிறது. தனியார் தொலைக்காட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரத்யோக பேட்டி.
* எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத படிப்புகளுக்கு இன்று (17ம் தேதி) காலை 9.00 மணி முதல் வரும் 27ம் தேதி வரை, சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) விண்ப்பிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் இல்லை. நிர்வாக இடங்களுக்கு ரூ. 2,000ம், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு ரூ.5,000 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் அல்லாத படிப்புகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள், மருத்துவ படிப்பிற்கு எளிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் விண்ணப்ப எண்ணை ஆன்லைனில் பதிவிட்டதும், அவர்களது முழு தகவல்களும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தில் இணைந்துவிடும். ஏற்கனவே பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்ற வேண்டியதில்லை.
* 2019ல் லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள் : மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள்.
* திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 2 ல் தலைமை எழுத்தராக பணிபுரிந்த திருமதி . சாந்தி கொரோனா நோய் தொற்றால் இன்று மாலை மரணம் .
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநர் சுபாஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யாவிடில் சட்டப்படி நடவடிக்கை - தொழிலாளர் துறை.
* 5 புதிய மாவட்டங்களில் தேர்தல் நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்
* இனி ஓடிபி இல்லாமல் சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது, நவம்பர் 1 முதல் வீட்டு விநியோக முறை மாறும், புதிய விநியோக முறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும்..!
சமையல் கேஸ் சிலிண்டர் தொடர்பாக விதிகள் மாறப்போகின்றன. புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடும். சமையல் கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யும் முழு அமைப்பும் இப்போது மாறப்போகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
அடுத்த மாதம் முதல் இந்த புதிய விநியோக முறை செயல்படுத்தப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு சிலிண்டரை புக் செய்துவிட்டு வீட்டில் உட்கார்ந்தால், இந்த செய்தியை நீங்கள் படிக்க வேண்டியது அவசியம்.
தகவல்களின் படி சமையல் கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்யும் முறை நவம்பர் 1 முதல் மாற்றப்படும். சிலிண்டர்கள், சிலிண்டர் திருட்டு ஆகியவற்றிலிருந்து எரிவாயு திருடப்படுவதைத் தடுக்கவும் சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் புதிய அமைப்பை விநியோக அங்கீகார குறியீடு (DAC) உடன் இணைக்க திட்டமிட்டுள்ளன. இதில், சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு குறியீடு தோன்றும். இந்த ஓடிபியை சிலிண்டர் வழங்கும் நேரத்தில் டெலிவரி பையனிடம் வழங்க வேண்டும். இந்த குறியீடு காண்பிக்கப்படாத வரை, டெலிவரி முடிக்கப்படாது, நிலுவையில் இருக்கும் நிலையில் இருக்கும்.
உங்கள் மொபைல் எண் எரிவாயு விற்பனை நிறுவனத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அல்லது எண் மாறிவிட்டால், நீங்கள் அதை விநியோகத்தில் மட்டுமே புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி பையனுக்கு ஒரு செயலி வழங்கப்படும். டெலிவரி நேரத்தில், அந்த பயன்பாட்டின் உதவியுடன் உங்கள் மொபைல் எண்ணை டெலிவரி பாய் புதுப்பிக்கலாம். பயன்பாட்டின் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். இதற்குப் பிறகு, அதே எண்ணிலிருந்து ஓடிபியை உருவாக்க ஒரு வசதி இருக்கும்.
இந்த புதிய விநியோக முறையை எண்ணெய் நிறுவனங்கள் முதலில் 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தும். இது ஒரு பைலட் திட்டமாக செய்யப்படும். படிப்படியாக அதே முறை நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். தற்போது, இந்த அமைப்பு இரண்டு நகரங்களில் ஒரு பைலட் திட்டமாக இயங்குகிறது. புதிய அமைப்பு உள்நாட்டு சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக சிலிண்டர்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
* குளறுபடி காரணமாக நீட் தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது தேசிய தேர்வு முகமை
*வங்கக் கடலில் உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல். வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கொரோனா தொற்று காரணமாக தசரா விழாவில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கேரள அண்மையில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித் மீது வெளிநாடுகளில் டாலர்களை கடத்தியதாக சுங்க துறை புதிய வழக்கு இன்று பதிவு செய்தது.
இருவரும் வெளிநாடுகளில் 1.90 மில்லியன் டாலர்களை கடத்தியதாக சுங்கத் துறை தகவல் தெரிவிக்கிறது. விழுப்புரம், செஞ்சியை சேர்ந்த மாணவி ரம்யாதேவி நீட் தேர்வு தோல்வியால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.
* சென்னை மயிலாபூர் ரஷ்யா தூதரகம் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது
* முக கவசம் இன்றி காரில் பயணம் செய்த அருவி பட நடிகை அதிதி பாலனுக்கு அபராதம்.
No comments