பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தென்னங்கன்று வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவாசிகள் நகராட்சி அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பினர்.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய்கரை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது வீட்டின் அருகே சாலை ஓரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னங்கன்றுகளை நட்டு உள்ளார். தென்னங்கன்று உள்ள அந்த சாலை கே.கே நகர் மற்றும் ஜெகதாம்பாள் நகருக்கு செல்லும் வழி என்பதால் அவ்வழியாக செல்வேறுக்கு இடையூறை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் . மேலும் தென்னங்கன்று வளர்ந்தால் அதன் வேர்கள் மண்ணுக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயை பாதிக்கும் என்றும் கூறி இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தென்னங்கன்றுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு வந்த தெருவாசிகள் தென்னங்கன்றுகளை அகற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
No comments