Header Ads

காதலால் தாயை இழந்த இளம் பெண்......


✍️ | ராஜாமதிராஜ்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் மேரி(56). இவருடைய கணவர் தமிழ்தாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் 

மேரி தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு மேரி(33), கனிமொழி(31), கஸ்தூரி(22), தமிழரசி(20), வர்ஷினி(19 என்ற 5 மகள்கள் உள்ளனர். இதில் மேரி மற்றும் கனிமொழி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.

தமிழரசி, கஸ்தூரி மற்றும் வர்ஷினி ஆகியோர் கோபி அருகே உள்ள தனியார் மில்லின்  விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே மில்லில் வேலை செய்து வரும் பர்கூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் வர்ஷினியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வர்ஷினியை தனக்கு திருமணம் செய்து தருமாறு அந்த வாலிபர் தாயார் மேரியிடம் கேட்டுள்ளார். அதற்கு இருவரின் வயது வித்தியாசம் அதிகமாக உள்ளதன் காரணமாக வர்ஷினியை திருமணம் செய்து தர மேரி மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த வாலிபர் மீண்டும் திருமணம் செய்து தர மேரியிடம் வற்புறுத்தி உள்ளார். மேரி மறுக்கவே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மேரியை அரிவாளால் சரமாரமியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த மேரியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பலியானார்.

இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.