Header Ads

உபியில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ராட்டையுடன் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்


✍️ | ராஜாமதிராஜ்.

திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பப்ட்டத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்  உத்திர பிரதேச அரசுக்கு எதிராகவும் ராட்டையை சுழற்றி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மன்னார்குடி நகரத்தலைவர் ஆர்.கனகவேல் , வட்டாரத்தலைவர் எஸ்.செல்வராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் அன்புவீரமணி கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினார்கள் நெடுவை குணசேகரன் , பி.வடுகநாதன் மற்றும் கூத்தாநல்லூர் நகரமன்ற உறுப்பினர் சாமீர் தொழிற்சங்க தலைவர் பி.பஞ்சன், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

No comments

Powered by Blogger.