Header Ads

தினசரி காலண்டர் மற்றும் இன்றைய ராசி பலன்!!!

 


✍️ | மகிழ்மதி.

ஸ்ரீ சார்வரி ஆண்டு – புரட்டாசி 21 - புதன்கிழமை (07.09.2020)

நட்சத்திரம் : ரோஹிணி மாலை 6.41 வரை பின்னர் மிருகசீரிஷம்
திதி : பஞ்சமி பகல் 12.04 வரை பின்னர் சஷ்டி
யோகம்: சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.00 - 10.00 / மாலை 4.45 - 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்.


மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பழைய வீட்டை மாற்ற வேண்டிவரும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே, எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். பணவரவு அதிகரிக்கும். வாகனத்தில் எப்போதும் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்ம ராசி நேயர்களே, நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் பல நன்மை உண்டு. உத்யோகத்தில் மனநிம்மதி உண்டாகும்

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உடன்பிறப்புகள் வகையில் ஆதரவு கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆன்மீக நாட்டம் கூடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். தொழில், வியாபாரம் சூடி பிடிக்கும்.

தனுசு ராசி நேயர்களே, சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போகவும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். தொழில் நிலை சிறப்படையும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும், பழகுவதும் நல்லது. தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். பொருளாதார நிலையில் ஏற்ற, இரக்கம் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி நேயர்களே, குடும்ப சுமைகளை ஏற்க வேண்டிவரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.



No comments

Powered by Blogger.