பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு
* பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று(அக்.,23) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பொது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் அல்லது பெற்றோரை வரவைத்து, சான்றிதழ்களை வழங்க, அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
* புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. 5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை.
* வடதமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பருவமழை இருக்கும் என கணிப்பு. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28 முதல் தொடங்க வாய்ப்பு. - பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்.
* சென்னையில் தீபாவளியை பண்டிகையையொட்டி வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 மாநகரப் பேருந்துகள் இயக்கம். தி.நகர்., பெசன்ட் நகர், பிராட்வே, வள்ளலார் நகர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட 25 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்.
* சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி.
* திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது; அவர்களே முடிவு செய்ய வேண்டும். - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
* சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
* விருதுநகர்; பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. முருகநேரி அருகே தாலிகுளத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு. வெடிவிபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு.
* கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு
No comments