Header Ads

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு:  செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்.

* சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்  தொகுதிகள் இடம்பெறும்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகள்.

* ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

* மக்கள் கோரிக்கைளை செய்ய மறுக்கும் ஆட்சியாளர்கள். வரலாறு காணாத போராட்டத்திற்கு தயாராவோம்- ராமதாஸ்.

* தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் (அக்.23) பதிவு செய்யலாம்.

- வேலைவாய்ப்புத்துறை.

* ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, '11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூபாய் 2,081.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூபாய் 7,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 17,951 வரை ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக வழங்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* தூத்துக்குடி மாவட்டம், குலசையில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் கடம்பூர்  ராஜூ, வருகிற 29 ம் தேதி தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் அதிரடி திட்டத்தை அறிவிப்பார் என்று  கூறியுள்ளார்.

* நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2081.68 கோடி போனஸ். 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என அறிவிப்பு. "அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும்".

* எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளே தேங்கி நிற்கும் மழைநீர்.. நோயால் அவதியுறும் குழந்தைகளை பாதுகாப்பற்று தேங்கிய நீரில் அழைத்து செல்லும் பெற்றோர்.

* பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.!! 1 லிட்டர் பெட்ரோல் விலை - ரூ.84.14. 1 லிட்டர் டீசல் விலை - ரூ.75.95.

* ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் பொருட்கள் டோக்கன் வழங்க அரசு உத்தரவு . வருகிற  27 , 28, 29  ஆகிய மூன்று நாட்கள் வீடு வீடாக சென்று நவம்பர் மாதம் ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களுக்கு டோக்கன் வழங்க நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

* கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது" மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உயர்கல்வித்துறை. புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி.

* மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும். அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்! இந்தியா வானிலை  ஆய்வு மையம்!

* விளாத்திக்குளத்தில் ஒரே இடத்தில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையால் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப் பதிவு. திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன், அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட 604 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை.

* கோயம்பேடு பழ சந்தை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாக தகவல் !

கோயம்பேடு பழ சந்தை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக காரணமாக பழ சந்தை தற்போது மாதவரத்தில் இயங்கி வருகிறது. தொற்று குறைய தொடங்கியதை அடுத்து, பழ சந்தையை மீண்டும் கோயம்பேட்டிற்கே மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* தமிழகத்தில் அனைவருக்கும் அரசு செலவில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்- முதல்வர் பழனிசாமி.

* JEE தேர்வு இனி இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் நடத்தப்படும்!” மத்திய கல்வி அமைச்சர்  அறிவிப்பு.

* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பிறந்தநாள். மறுமலர்ச்சி  திமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் 68வது பிறந்த நாளையொட்டி, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

* தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் - குடியரசுத்தலைவருக்கு திருமாவளவன் எம்.பி. கடிதம். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் எம்.பி.

* தேர்தல் நேரத்தில் சூழலுக்கேற்ப கூட்டணி அமையும் - இல.கணேசன்

No comments

Powered by Blogger.