Header Ads

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவின் 3வது கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்

 * முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவின் 3வது கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், கோவை, நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

26 தொழில் திட்டங்கள் மூலம் ரூ.25,213 கோடி முதலீட்டில், சுமார் 49 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம்.

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம்.

* தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,97,116-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,780-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,50,856- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35,480- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்தது.

இன்று மட்டும் 845 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 192527-ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.