திமுக ஆட்சியில் துணிகளை துவைத்து காய வைக்க மின்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* அரசு பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆகா உயர்வு.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,736க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,842க்கு விற்பனை.
* அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விளாத்திகுளம் மார்க்கண்டேயன் திமுக-வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்க்கண்டேயன் இணைந்தார்.
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான அட்டவணை வெளியானது! வேட்புமனு விண்ணப்பம் வழங்கும் நாள்: - அக்.15. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: அக். 23. தேர்தல் : நவ. 22.2020.
* தமிழகம் முழுவதும் 2,650 கோடி மதிப்பிலான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை. ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல், அதிகாரியிட்ட அறிவிப்பாணையை சென்னை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
* மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். இன்னும் சில வாரங்கள் கழித்து தொடர் படப்பிடிப்புகளில் அவர் ஈடுபட இருக்கும் நிலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்..
* மாநிலங்கள் இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில்...! தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி.
* அக்டோபர் 14 -முதல் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
* பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையை அலங்கரிக்கும் வரை ஓயப்போவதில்லை. - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
* தமிழகத்தில் திமுக ஆட்சியில் துணிகளை துவைத்து காய வைக்க மின்கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. - செல்லூர் ராஜு.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்.
No comments