இரண்டாவது நாளாக மீண்டும் ஒரு தற்காலிக பெண் ஊழியர் -மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த சுகந்தா என்ற பெண் அருகில் உள்ள கர்ணாவூர் பஞ்சாயத்தின் ஊக்குவிப்பாளராக மன்னர்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
கழிப்பறை கட்டுவதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ஊக்குவிப்பாளர் சுகந்தா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரியும் தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறி இன்று மாலை சுகந்தா மண்ணெண்ணெய் கேனுடன் மன்னர்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்த்திற்கு வந்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் சுகந்தாவை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் நடைபெற்ற நடை முறைகேடு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மண்ணெண்ணெய் கேனுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தரிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் ஒரு பெண் ஊழியர் மீண்டு பணி வழங்க கூறி மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் மன்னர்குடியில் பரபரப்பு நிலவியது.
No comments