இன்றைய லீடர் முக்கிய செய்திகள்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தால் விரும்பும் நேரத்தில் தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு.
* பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வரும் உண்மையை மறைக்க முடியாது: இந்திய வெளியுறவுத்துறை.
* சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறப்பு.
* கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
* மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்.
* அரசாணை வெளியீடு:
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை.
மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை வரவேற்புக் குரியது. - டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.)
* திருச்சி லால்குடியில் இருந்து உத்தமர்சீலி நோக்கி இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற ஆபாவாணன் (வயது 28) என்பவர், பனையபுரம் அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே பலி.
* தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.123.35 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளதாக வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 20,307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
* இனி பப்ஜி விளையாட முடியாது. இந்தியாவில் இன்றுமுதல் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை.
* ராயலசீமா நீர்ப்பாசனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம்.. பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு.
* ரஜினிகாந்த் நிம்மதியான அமைதியான சூழலில் வாழ வேண்டும். இது ரொம்ப கடினமான ஆட்டம் உங்களுக்கு இது வேண்டாம் உங்கள் கருத்துக்களை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் செயல்படுத்துகிறோம் உடல்நலம் கருதி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அன்போடு கூறுகிறோம் - சீமான்.
* தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
-பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.
* நாளை 31 10 2020 ஆம் தேதி காலை 09.45மணி அளவில் தீவுத்திடல் முன்பாக ராஜாஜி சாலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது இதன்பொருட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது இந்த நிகழ்வில் கூடுதல் காவல் துறை இயக்குனர் ஆயுதப்படை அவர்களும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
No comments