பருவமழை கிடைக்காத மற்றும் மண் ஈரம் அதிகரிக்கும் நிலை இல்லாமலும் உள்ளது. - பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
அனைத்து விவசாய சொந்தங்களே தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்காமல் சில நாட்கள் தள்ளிப் போகும் நிலை உள்ளது இதனால் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே சிறிது மழை கிடைத்திருந்தாலும் முறையான பரவலான பருவமழை கிடைக்காத மற்றும் மண் ஈரம் அதிகரிக்கும் நிலை இல்லாமலும் உள்ளது இதன் காரணமாக இதனை நம்பி புரட்டாசிப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீண்டகால தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை உள்ளது மேலும் பெரும்பாலான மேட்டுப்பகுதி மாவட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்ட சூழ்நிலை உள்ளது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருக்கும் நிலங்களில் தண்ணீரை பயன்படுத்தி பயிர்களும் வளராமல் இருக்கும் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தலாம்
1. சொட்டுநீர் பாசன அமைப்புகள் வழியே தண்ணீர் தராமல் தண்ணீரை 2000,1000 லிட் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றின் தண்ணீரை சேகரித்து ,அந்த தண்ணீரை ஒவ்வொரு மரங்களுக்கும் குறைந்தபட்சம் தினசரி 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை கிடைக்குமாறு(தென்னை மரங்களுக்கும்) சுழற்சிமுறையில், மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்சலாம் .இவ்வாறு பாய்ச்சும் தண்ணீருடன் இயற்கை இடுபொருட்கள் ஆன பஞ்சகாவியா இஎம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து பயிர்களுக்கு தருவது கூடுதல் சிறப்பாக அமையும்.
2. சொட்டுநீர் பாசனம் அமைத்த நிலங்களில் சுழற்சி முறையில் தண்ணீர் கொடுக்கும் பொருட்டு சிறிய சிறிய அளவுகளாக அதாவது அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை மட்டுமே ஒருமுறைக்கு என்ற அளவில் பிரித்து பாசனம் செய்யலாம். தெளிப்பு நீர் பாசன கருவிகளை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
3. செம்மண் ,செம்மண் சரளை மற்றும் மணல் வாரி நிலங்களில் உள்ள பயிர்களின் மேற்பரப்பில் உள்ள வட்ட பாத்திகளில் குறைந்தபட்சம் 3 சட்டி அல்லது 15 கிலோ அளவுள்ள கரம்பை மண் பரப்பி அதன்மேல் பாசனம் செய்யலாம்.
4. நிலங்களில் ஆங்காங்கே வளர்ந்துள்ள உயரமான களைச் செடிகளை வேருடன் பிடுங்கி வட்டப்பாத்தி பரப்பி ஒரு மூடாக்காக போடலாம். மேலும் அருகில் கிடைக்கும் காய்ந்த இலை தளைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம்.
5. வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி .பி .எஃப். எம் (PPFM) எனப்படும் வறட்சியை எதிர்க்கும் தன்மை உள்ள பாக்டீரியா கலவையை பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி முதல் 300 மில்லி வரை கலந்து மாலை வேளையில் 100 மில்லி அசோஸ்பைரில்லம் கலந்து தெளிக்கலாம் .அல்லது பஞ்சகாவியா மீன் அமிலம் இஎம் கரைசல் இவை மூன்றில் ஏதேனும் ஒரு இடுபொருள் உடன் இதில் கலந்து தெளிக்கலாம்.
6. தரைவழி தண்ணீர் கொடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் இல்லாத விவசாயிகள் குறைந்தபட்சம் 200 லிட்டர் தண்ணீர் கிடைத்தால் அதனுடன் அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகவ்யா கலந்து குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் கழித்து மாலை வேளையில் பயிர்கள் மீது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
No comments