லீடர் முக்கிய செய்திகள்
* திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு டுவிட்.
* தாய் பாலின் மூலம் கொரோனா பரவாது; பச்சிளம் தாய்மார்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு. விஜயா.
* மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.
* தமிழகத்திலுள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்களுக்கு எதிராக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
பிராய்லர் கோழி வளர்ப்பதற்கு கூலியாக கிலோவிற்கு ரூ 15 உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை கூலி உயர்த்தி தரவில்லை என்றால் பிராய்லர் கோழியை விற்பனைக்கு அனுப்பி வைக்க மாட்டோம் மேலும் பிராய்லர் கோழி விலை உயர வாய்ப்பு உள்ளது என திண்டுக்கல் கறிக்கோழி பண்ணையாளர் நலச்சங்க மாவட்ட செயலாளர் முகமது ரபிக் பேட்டி.
* மிலாடி நபியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு.
* சென்னை மையமாக வைத்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: -அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு.
No comments