லீடர் முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்.
* மருத்துவப் படிப்புக்கான ஓ.பி.சி. இடஒதுக்கீடு; தமிழக அரசின் அலட்சியப் போக்கு! -வைகோ கண்டனம்.
* நாகை: சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு: ரூ.19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் கொடியம்பாளையத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் கிராம மீனவர்கள் பயனடைவர். - அமைச்சர் ஜெயக்குமார்.
* தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவு.
* ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்பு. ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட முடியும் என கடந்த ஜூன் மாதம் சூரப்பா கூறியிருந்தார்.
* தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறப்புக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி.
* தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு. 2021 ஜனவரி.31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
* ராகவேந்திரா கல்யாண மண்டப விவகாரம்... நாளை (14-ம் தேதி) நள்ளிரவுக்குள் சொத்து வரியைச் செலுத்தாவிட்டால் 2 சதவிகிதம் வட்டியுடன் கட்ட வேண்டும் என ரஜினிக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
* உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு! வைகோ கடும் கண்டனம்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார்.
* 2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?- தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு... தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2016-ம் ஆண்டு முதல் எத்தனை மூடப்பட்டன என்பது குறித்து பதிலளிக்க உயர் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
* சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை. சீர்காழி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.42,000 சிக்கியது. சார்-பதிவாளர் (பொறுப்பு) நாகநந்தினி, எழுத்தர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* புதுச்சேரி...பாகூரில் மீட்டர் ரீடிங் எடுக்க வந்த. போது 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... மின்துறை ஊழியர் வினோத் (30)திற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை...புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு....
* ஒசூரில் குடும்பத் தகறாரில் மனைவி கத்தியால் வெட்டி படுகொலை : காவல் நிலையத்தில் கணவன் சரண்.
* தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* அ.ம.மு.க மாநில நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* பழங்குடியினர் பாதுகாவலர் 83 வயதான திருச்சி அருட்தந்தை சே. ச. அவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி எம்.பி, மற்றும் முன்னாள் எம்.பி, பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொள்ளும் மாபெரும் கருத்தரங்கம் பின்னர்இருவரும் கூட்டதாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
* ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை; ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. அபராதம் விதிக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு பதில்.
* தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையத்திற்கு நேரில் சென்று முன்னாள் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், முன்னாள் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு திமுக மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்ததுடன் முதலமைச்சருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
* இலவச வேட்டி சேலைக்கானா நூல் அரசு நோட்டீஸ் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்ட தரமற்றவை என தொடப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
* பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி!- விருதாச்சலத்தில் வில்லேஜ் விஞ்ஞானிகள் கைது. விருத்தாசலம் அருகே பறவைகளை வேட்டையாட யுடியூப் பார்த்து பிளாஸ்டிக் பைப்பில் துப்பாக்கி தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* உத்தரப்பிரதேசத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீச்சு... காதலிக்க மறுத்ததால் 17 வயது சிறுமி மீது தாக்குதல்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம்.
* சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்!! மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு.
* இதுவரை கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்புகளில் 70% ஆண்களாகும் ! -மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.
* அடுத்த ஆண்டு மே மாதம் வரை பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டாம் ! பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் "பாடத்திட்டங்களை மேலும் குறைக்க வேண்டும்". - டெல்லி அரசு CBSEக்கு வலியுறுத்தல்.
* 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா? -உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி.
* தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.. ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
* தீபாவளி பண்டிகைக்கு அரசு பேருந்து முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது!
* நாளை முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி. அக்டோபர் 15 முதல் பாதி அரங்கு நிரம்ப படக்காட்சிகளைத் திரையிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
No comments