மன்னார்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடகம்...

✍ | -ராஜாமதிராஜ்.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்கம் சார்பில் கொரோனா தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நிகழ்ச்சி நடைபெற்றது. எமன் மற்றும் கொரோனா வேடமன்றத கலைஞர் கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பின்னார் மன்னார்குடி பெரியார் சிலை, பந்தலடி பகுதிகளில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் பொதுமக்கள் முக கவசம் அணிவது, கைகளை கழுவுதல், சமுக இடைவெளியை பின்பற்றுவது என அரசு கூறும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை பொது மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு கழித்தனர்.
No comments