Header Ads

தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு மையம். “தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படும். -மத்திய அரசு

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* காவலர் வீரவணக்க நாள் முன்னிட்டு இன்று டி.ஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் டி.ஜி.பி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

* TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

* பார்த்திபன் இயக்கி நடத்த 'ஒத்த செருப்பு' மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஹவுஸ் ஓனர்' உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு.

* வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் சுகாதாரத் துறையினருக்கு பொது சுகாதார துறை இயக்குனர் உத்தரவு. வருவாய்த் துறையுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொள்ள உத்தரவு.

* தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு மையம். “தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படும்” சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அரசு பதில்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்கான தேர்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட வேண்டுமென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி,  சு. வெங்கடேசனின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுத் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படுமென சி.ஆர்.பி.எப் பொது இயக்குனரகம் பதில் அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு. வெங்கடேசன் " திறந்த மனதோடு கூடுதல் மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழகம், புதுவைக்கு தேர்வு மையம் கிடைக்குமென்று நம்புகிறேன். அதை சி.ஆர்.பி.எப் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்ப நிலையிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுவது, மையங்கள் இல்லாத பகுதிகளை சார்ந்தவர்களின் முனைப்பை பாதித்திருக்க கூடுமென்பதால் புதிய மையங்களை அறிவித்து விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்ற எனது   கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். கோவிட் சூழலை மனதில் கொண்டு இக் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

* தமிழகம் முழுவதும் இரவு 10-00 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதி அளித்து உள்ளது தமிழக அரசு நாளை முதல் அமுலில் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

* மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல். மத்திய அரசுக்கு ரூ.3737 கோடி செலவு ஏற்படும். நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர்.

* மதுரையில் வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 35 டன் வெங்காயம் இறக்குமதி! ஆப்கானிஸ்தான் வெங்காயம் மொத்த விற்பனையில் 70 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* 09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

* ஒத்த செருப்பு' படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்கு, தலைவர் வைகோ அவர்கள் இயக்குனர் பார்த்திபன் அவர்களை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

* பாலிமர் செய்திகளில் பணி செய்து  வந்த ஹரீஷ்( வயது 22 ) சாலை விபத்தில் மரணம்.  -: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி.


No comments

Powered by Blogger.