Header Ads

இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சேலம் அருகே, 78 வயது முதியவரை உயிருடன் FREEZER BOX-ல் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டி அருகே, பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், அவருடைய சகோதரர் சரவணன், சகோதரியின் மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாலசுப்ரமணிய குமார் இறந்து விட்டதாக கூறிய அவரது சகோதரர், FREEZER BOX வரவழைத்துள்ளார்.

FREEZER BOX-ஐ கொண்டு வந்த பணியாளர்கள், மறுநாள் வந்து எடுத்துச் செல்வதாக கூறிச் சென்றனர். அதன்படி, மறுநாள் FREEZER BOX-ஐ திரும்ப எடுக்க அவர்கள் வந்தபோது, பெட்டிக்குள் இருந்த பாலசுப்பரமணிய குமாரின் உடல் அசைவதைக் கண்டு அதிர்சியடைந்தார்.

இதுகுறித்து அவர்கள் கேள்வி எழுப்பியபோது, அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டுச் செல்லவில்லை என்றும், இன்னும் சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விடும் என்று உறவினர்கள் கூறியதைக் கேட்ட பணியாளர்கள் மேலும் அதிர்ந்தனர். முதியவர் உயிரோடு இருப்பது குறித்து அப்பகுதி மக்களிடமும், காவல்துறையினரிடமும் தெரிவித்தனர் FREEZER BOX-ஐ எடுக்க வந்த பணியாளர்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் FREEZER BOX-க்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலசுப்ரமணிய குமாரின் உடல் நிலை கவலைக்கிடமானதால், அவரது சகோதரர், அவரை FREEZER BOX-ல் வைத்துவிட்டு, இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

முதியவர் பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக தவறாக நினைத்து FREEZER BOX-ல் வைத்தனரா? அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காக பாலசுப்ரமணியத்தை கொல்ல முயற்சி அரங்கேறியுள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் பாலசுப்ரமணிய குமாரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.