இன்றைய (06 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
* அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டதையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அது தொடர்பானவர்களை குற்றவாளியாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி நடத்துபவர்கள், விளையாடுபவர்களை குற்றவாளிகளாகக் கருதி கைது செய்ய விரைவில் சட்டத்திருத்தம் - தமிழக முதலமைச்சர் பழனிசாமி.
* இந்திய வரலாற்றில் முதல்முறையாக கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துகள் கண்டுபிடிப்பு.
* பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீதான வழக்கு : 2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்குகளில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு.
* டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு.
* மனுஸ்மிருதி நூல் பற்றிய விமர்சனம் தேவையற்றது.புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி பற்றி பேச வேண்டிய அவசியமில்லை - நடிகர் கமல்ஹாசன்.
* வரும் 10ம் தேதி தியேட்டரில் படம் வெளியாக வேண்டும் என தியேட்டர்களுக்கு பட அதிபர்கள் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
* அதிக கல்வெட்டுகளில் எழுத்துக்கள் தமிழ் மொழியில் இருக்கிற சூழலில், சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன ? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
* ஹரியானாவில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் வேலைகளில் 75% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஹரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்.
* ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கியதை எதிர்த்து வழக்குத் தொடுக்க தீபக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி.
* பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு.
* ராமேஸ்வரம் கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு , முறைகேடுகள் இல்லை - கோயில் நிர்வாகம்.
* இதுதான் எனது கடைசி தேர்தல் பீகார் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்த நிதிஷ் குமார்.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* தடையை மீறி தொடங்கியது பாஜகவின் வேல் யாத்திரை : கையில் வேலுடன் புறப்பட்டார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்! முருகனை வழிபட நான் விரும்புகிறேன் எனக்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது - எல்.முருகன்.
அரசு தடையை மீறி வேல் யாத்திரை திருத்தணியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு.
அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம் - எச்.ராஜா.
வேல் யாத்திரை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் பாஜகவைச் சேர்ந்த 11 பேர் கைது. தடையை மீறும் பாஜகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம். அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி மிரட்டல். -வீரப்பன் என்ற பெயரில் வந்துள்ளது.
* நீலகிரி, தேனியில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு. திருப்பூர், திண்டுக்கல், தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை, புறநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தென் மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
* அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 17-தேதிக்கு ஒத்திவைப்பு.
* கொரோனா சோதனை எண்ணிக்கை அதிகரிப்பு - தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்!! - தமிழக அரசு!
* கொரோனா தடுப்பூசி உடனடியாக பயன்பாட்டுக்கு வராது' -இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
No comments