இன்றைய (08 நவம்பர் 2020) முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கவில்லை. இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
அரசின் கொள்கையில் முடிவு எடுக்க முடியாததால் மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல். மத்திய கல்வித்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
* சூலூர் அருகே பழமையான கோயிலில் செப்பு கலசம் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ளது வேணுகோபாலசாமி கோயில். இது, 300 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும். இந்துசமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோயில் பூசாரி சோமஸ்கந்தர் கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.
* தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலங்களில் வெள்ள நீர் பாதிப்பு அதிகம்.
கடல் மட்டத்தில் இருந்து பெரும்பாலான மாநகராட்சி பகுதிகள் தாழ்வான இடத்தில் இருப்பதால் வெள்ள பாதிப்பு ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை நிவர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
* பென்சில்வேனியா, நிவேடா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றதன் மூலம் 290 இடங்களை கைப்பற்றியதால் 46-வது அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன். வரலாற்றில் முதன் முறையாக, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வாகிறார்.
No comments