தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
14.11.2020 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம். பாண்டிபஜார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
07.11.2020 அன்று சென்னை, தியாகராய நகர் பகுதியில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு சேவை திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் துவக்கி துவக்கிவைத்து பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு உதவிட, R-1 மாம்பலம் மற்றும் R-4 பாண்டிபஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த காவல் உதவி மையங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்ததுடன் ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் திட்டம் மற்றும் கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை ரிமோட் மூலம் துவக்கி வைத்தார்.
மேலும் தற்காலிக கட்டுப்பாட்டறைகளுடன், உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பைனாகுலர் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சீருடையில் (Body worn Camera) உள்ள காவல் குழுவினரை, குற்றவாளிகளை கண்காணித்து குற்றநடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
No comments