இன்றைய (13 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு. சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் நடவடிக்கை.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு. 3 மாதங்களில் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவு. அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார்-உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தகவல்.
* அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, சேலம். நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்திற்காக வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
* திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கல்லாத்துக்கோம்பையில் வீட்டின் வெளியே விளையாடிய சிறுவனை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் புகாரளித்த நிலையில் சிறுவன் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரா இடங்களில் மிதமான மழை பெய்தது. பார்வதிபுரம், புத்தேரி, ஆசாரிபள்ளம் , பெருவிளை, தம்மத்துகோணம், எறும்புக்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
* சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி, தாம்பரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
* திண்டுக்கல்: நரசிங்கபுரம் அணைக்கட்டு ராஜவாய்க்கால் நீர் வழித்தடங்களை வேடசந்தூர் குடகனாறு உரிமை மீட்பு குழுவினர் பார்வையிட்டனர்.
* சேலம் லீ பஜார் பகுதியில் பிரபு ராவ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
* கிருஷ்ணகிரி: ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் கொடுத்து நிலத்தை பதிவு செய்ய முயற்சி . ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது.
சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் பாஸ்கரன் , பாண்டிச்சேரி ஆட்டோ டிரைவர் முகமது ஆசிப் ரசூல் , பாகலூர் கோட்டை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆஞ்சனப்பா , பாகலூர் தேர் பேட்டை ரியல் எஸ்டேட் புரோக்கர் மஞ்சுநாத் , பாண்டிச்சேரி காரைக்கால் சம்சுதீன் ஆகிய 5 பேர் கைது . இவர்கள் மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு . ஓசூர் டவுன் போலீசார் நடவடிக்கை
* சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் படையெடுப்பு!
ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறையினர் இலவச அனுமதி அளித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது
* கன்னியாகுமரி 7.5 % இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் & அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
* கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாடலீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
* சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், மற்றும் திருவேற்காடு வேதபுரிஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, முன்னிட்டு இன்று மாலை, 4:30 மணி நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது.
* தர்மபுரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. தருமபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தரக்கட்டுபாட்டு அலுவலகத்தில், 6 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
* சென்னை யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பா? கொலை சம்பவம் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் 6 பேர் இருந்ததாக தகவல்.
கொல்லப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கொலையில் தொடர்பா என விசாரணை.
* தூத்துக்குடி: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. சுகாதார இணைஅலுவலகம், தொழிலாளர் பாதுகாப்பு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
No comments