Header Ads

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் 2 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.


✍ | -ராஜாமதிராஜ். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் 2 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வது எளிதானது.  இந்நிலையில் மன்னார்குடியில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என்றும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில் கல்கத்தா மாநிலம் டிட்டாக்கர் எனும் இடத்திலிருந்து கடந்த 10ஆம் தேதி 33 சரக்கு ரயில் பெட்டிகளுடன் சாக்கு பண்டல் ஏற்றி வந்த சரக்கு ரயில் இன்று காலை மன்னார்குடி ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து முதன்முறையாக மன்னார்குடிக்கு வந்துள்ள சரக்கு ரயில் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாக்கு படல்கள் இறக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு இன்று முதல் சரக்கு ரயில் பெட்டிகள் வந்து செல்ல தொடங்கியுள்ளது இப்பகுதி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசாகவே தொழிலாளர்கள் மகிழ்கின்றனர். ரயில்வே துறையின் இத்தகைய சேவையின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.