இன்றைய (17 நவம்பர் 2020) முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* திண்டுக்கல் பழனியில் இடப்பிரச்சனையில் 2 பேரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் அதிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடத்தகராறு காரணமாக தியேட்டர் அதிபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம் அடைந்தனர். பழனி அப்பர் தெருவில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் அதிபர் நடராஜன் சுட்டதில் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பழனிசாமி, சுப்பிரமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* சென்னையில் காலையில் ஓய்ந்த மழையானது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, வேளச்சேரி, ஆவடி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* புதுச்சேரியில் காவலராக பணிபுரிந்துவந்த சதாசிவம் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இடமாற்றம் செய்ததால் காவலர் சதாசிவம் தற்கொலை செய்துகொண்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
* திண்டுக்கல் பழனியில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களில் பழனிசாமியின் காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. பழனி அரசு மருத்துவமனையில் பழனிசாமியின் காலில் இருந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.
* சென்னை துபாயில் இருந்து கடத்தப்பட்டு வந்த ரூ.97.7 லட்சம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயில் இருந்து வந்த பயணிகளை வழக்கம் போல, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான நபரிடம் இருந்து 1.85 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், அவருடன் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழந்தைகளுடன் வந்துள்ள மக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்தது. செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் கனமழை பெய்தது.
* நாமக்கல்: திருவண்ணாமலையிலிருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றவர்கள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கரை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். கொல்லிமலையில் காலை முதல் மழை பெய்து வருவதால் சாலை வளைவில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்தது.
* திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சம்பரை கிராமத்தில் காவலர் ராஜேஷின் மகன் சரண்தீப் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தீபாவளி அன்று ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த சரண்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த சரண்தீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக நிவாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
* தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி மற்றும் தளவாய்புரம் சுற்றுவட்டார கிராமத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
* நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு விலை உயர்ந்த மதுபானங்கள் கொள்ளை. கடையில் இருந்த வசூல் பணம் 90 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
* திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தலைமை கண்காணிப்பு செயற்பொறியாளர் ஆய்வு. திருவள்ளூரில் பரவலாக கனமழை பெய்வதால் தலைமை செயற்பொறியாளர் முத்தையா ஆய்வு.
* கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி சிறுமி உயிரிழப்பு. நடந்து சென்றவர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் வர்ஷா(8) என்ற சிறுமி உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்.
* இராமநாதபுரம் பாம்பன் ரயில் பாலம் மீது மோதிய மிதவை மூன்று படகுகள் உதவியுடன் ரயில்வே ஊழியர்கள் மூலம் மீட்பு.
* எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு.
* ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா?" - மு.க.ஸ்டாலின்.
* ஐபிஎல் விளம்பர வருவாய் ரூ.2400 கோடி.
* மத்திய அரசு 11 கல்வி நிறுவனங்களுக்கு என்ன காரணம் கொண்டு விலக்கு கொடுத்திருந்தாலும், அது முதலிலே விலக்கு கொடுத்திருக்க வேண்டியது தமிழகத்திற்க்குத்தான். மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக இரண்டு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். ஆனால் அவற்றை எந்த காரணமும் சொல்லாமல் குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தின் நலனையும், குரலையும் தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய அரசுக்கு எதிராக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
சு. வெங்கடேசன் எம்பி
முகநூலில்
* செம்பரம்பாக்கம் ஏரி! நீரை வெளியேற்றுவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. 2015 பெருவெள்ளத்தை போன்ற ஆபத்து வராது என்கிறார்கள் அதிகாரிகள்.பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை.
No comments