Header Ads

இன்றைய (17 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். - வானிலை ஆய்வு மையம்.

* சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது.

* சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் பேரம் பேசி தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு. எதார்த்த அணுகுமுறைபடியே தொகுதி பங்கீடு என அறிக்கை.

* தமிழ்ப் பதிப்புலகத்தில் முக்கிய ஆளுமையான க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன் மறைவு வேதனையை அளிக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறைவு என்றும் அதே சமயம் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது என பொதுப்பணித்துறை தகவல் அளித்துள்ளது. 125 ஏரிகள் 75%, 206 ஏரிகள் 50%, 180 ஏரிகள் 25%, 324 ஏரிகள் 25% குறைவாகவும் நிரம்பியுள்ளது.

* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது : தலைமை பொறியாளர் அசோகன், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார். நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று கூறிய அவர், 2015 நடந்தது போல அதிகளவு மழை இப்போது பெய்யவில்லை என்றார்.

* கார் வைத்து இருப்பவர்கள் அந்த காரின் காப்பீட்டு பாலிசியை பாருங்கள். கிளைம் எதுவும் இல்லாத பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும். கிளைம் இல்லை. இப்போது காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சென்று NCB certificate கேளுங்கள் எழுத்து பூர்வமாக. அந்த Certificate ஐ புதிய கார் எடுக்கும்போது அவர்களிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ. அதே அளவு Discount பெற்றுக்கொள்ளுங்கள். No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்தாரே அந்த காரின் ஓனருக்குத்தான் சொந்தம் அந்த No claim bonus. புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் இந்த பயனை அடையுங்கள்.

No comments

Powered by Blogger.