தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 3 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை செம் புழுக்கள் பறிமுதல் இருவர் கைது.
✍ | -ராஜாமதிராஜ்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் வனத்துறையினர் செம்மரக்கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை நிறுத்தி விசாரித்தபோது அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்து சோதனையிட்டனர்.
அதில் உப்பங்கழி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக பிடித்து வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 20 கிலோ மருத்துவ குணம் கொண்ட அரியவகை செம் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வாகனத்துடன் அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்(45) கடலூரைச் சேர்ந்த விநாயகம் (40) ஆகிய இருவரை கைது செய்து மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டத்திலுள்ள உப்பங்கழி ஏரிகளில் தடையை மீறி சட்டத்திற்கு புறம்பாக செம் புழுக்களை பிடித்து ஆந்திராவுக்கு கடத்துவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments