இன்றைய முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* தமிழகத்தில் நாளை முதல் நண்பகல் 12மணி முதல் இரவு 10மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவிப்பு. (இதற்கு முன்பு இரவு 8மணி வரை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது).
* கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
* அமைச்சர் துரைக்கண்ணு வின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதோடு அதிமுகவிற்கு பேரிழப்பு என்று காவேரி மருத்துவமனையில் துரைக்கண்ணுவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
* அமைச்சர் துரைக்கண்ணு வின் மறைவு தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இரங்கல்.
* அமைச்சர் துரைக்கண்ணு மறைவு - வைகோ இரங்கல்.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.
பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments