Header Ads

நில வருவாய் பதிவேடுகளை மறு வகைபாடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். -பிஆர் பாண்டியன் வலியுறுத்தினேன்.


✍ | -ராஜாமதிராஜ்.

நில வருவாய் பதிவேடுகளை மறு வகைபாடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். - பிஆர் பாண்டியன் வலியுறுத்தினேன்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர் பாண்டியன் நேற்று சென்னையில் தமிழக நில வருவாய் சீர்திருத்த ஆணையாளர் திரு, K பண்ணீந்திர ரெட்டி IAS அவர்களை சந்தித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டு இருந்தது, குறிப்பாக 1984 பிறகு தமிழ்நாட்டில் இதுவரையிலும் நிலவுடமை பதிவேடுகள் மறுவகை பாடு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கேசிசி கார்டு வழங்க இயலவில்லை பிஎம் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளது.

பல விவசாய குடும்பங்கள் அரசினுடைய சலுகைகளை பெற முடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக மறு வகைபாடு செய்து கனினியில் பதிவேற்றம் செய்திட முன்வர வேண்டும்.இதனை இயக்கமாக குறிப்பிட்ட தேதியில் தொடங்கி குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்க்கொள்ள வேண்டும்.

மேலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் மிகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி கிராமப்புற வருவாய் நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.

அதனை ஏற்றுக்கொண்ட அவர் உடனடியாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து வருவாய் நில பதிவேடுகளை மறு வகைப்பாடு செய்வதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தர.

No comments

Powered by Blogger.