Header Ads

அமைச்சரின் இறப்பை வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதை தவிர்த்திருக்க வேண்டும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.


✍ | -ராஜாமதிராஜ்.

அமைச்சரின் இறப்பை வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதை தவிர்த்திருக்க வேண்டும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கணவனால் கைவிடப்பட்டோர் விதவைகள் கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்து 245 பேருக்கு நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று தமிழக அரசின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளால் குறைந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் தற்போது கரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பாகும் சூழலில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது நமக்கு மன நிறைவை அளிப்பதாக தெரிவித்தார். 

வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் பண்டிகை காலம் என்பதால் அரசு கூறும் நெறி முறைகளை பின்பற்றி மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்று காலத்திலும் அரசின் பல்வேறு சலுகைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இன்றைக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 1245  விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் கணவனை இழந்தோர் முதியோர் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் மேலும் 5 லட்சம் பேருக்கு இந்த உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற முதல்வர் உத்தரவின்படி தற்போது பயனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்இறப்பை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வது மிக மோசமான செயல் என்றும் இதனை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் கொலை செய்யப்பட்டது குறித்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் பாஜகவின் தமிழகத் தலைவர் தெரிவித்துள்ள கருத்து அவருடைய கருத்து என்றும் மக்களின் தேவையை நிறைவேற்றும் அரசாக அதிமுக ஆட்சி நடைபெறுவதால் அதிமுகவை மக்கள் விரும்புவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.