முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* ஓசூர் மாவட்டம் சானாமாவு வனப்பகுதியில் 38 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமாபுரம், குக்கலபள்ளி, பீர்ஜேபள்ளி, சானாமாவு கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளனர். வனப்பகுதியை ஓட்டிய கிராம மக்கள் ஆடு, மாடு மேய்க்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
* விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே பைக் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் இளம்பெண், இளைஞர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த விபத்தில் 25 வயதான இளைஞர், 20 வயதான பெண் உயிரிழந்தார்.
* பாஜகவுக்கு 50 தொகுதிகளை.. கேட்கும் அமித் ஷா,?? கொங்கு மண்டலத்தில் குறைந்தது 10 இடங்களை ஒதுக்க வலியுறுத்தல்! அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம்.!
* மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.82 அடியாகவும், நீர்இருப்பு 62.05 டிஎம்சியாகவும் இருக்கிறது.
* விராலிமலை அருகே ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு. குழந்தையை விற்க இடைத் தரகராக செயல்பட்ட கண்ணன் என்பவர் கைது.
* மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகளை ஆதீனத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றேன். பிரச்சார பயணம் வெல்ல வாழ்த்திய ஆதீனம் அவர்களுக்கு நன்றி.
* கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்! கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். இனி வரும் காலத்திலும் பா.ஜ.க அதிமுக கூட்டணி தொடரும் - ஓ பி.எஸ்.
* மிக திறமையான வல்லரசு நாடுகளே பாராட்டும் அளவுக்கு ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி- முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா பரவலை தடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு தமிழகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று வர இ பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி, சித்தூர், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பல லட்சம் பேர் பயன் அடைவார்கள். ஏற்கனவே கர்நாடகா, புதுச்சேரிக்கும் தமிழக அரசு போக்குவரத்தை அனுமதித்துள்ளது.
* தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! நவம்பர் 25ம் தேதி தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
* போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
*மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரித்துள்ளது. வரும் 26 -ம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிறவிடுப்புகள் ஏற்றுக்கொள்ளபடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலை வாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. தலைமைச்செயலாக ஊழியர்கள் 26 -ம் தேதி முழுமையான வருகை பதிவேடை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வருகையை உறுதிசெய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமை செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* கட்சி ஆரம்பிப்பதை கைவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர்! அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிறுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதினார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியை தற்காலிகமாக கைவிட்டார். தலைவர் பத்மநாபன், பொருளாளரான விஜயின் தாய் ராஜினாமா செய்ததால் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியை கைவிட்டார்.
* எம்.டி.எஸ் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு மறுப்பு!
No comments