மாமல்லபுரம்- காரைக்கால் இடையே வரும் 25ம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே வரும் 25ம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் சின்னம் காரணமாக 24,25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரைக்காலில் இருந்து 990 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள் தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
No comments