Header Ads

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சி. துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற கமலா ஹாரிசின் குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு.


| -ராஜாமதிராஜ். 

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள  துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.  அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் - ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் (55) என்பவர் போட்டியிடுகிறார்.

இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

ஸ்டெனோகிராஃபராக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன்,  ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர்.

1930-ம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

இவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டார்னியாகவும், தற்போது கலிபோர்னியாவில் ஷெனட்டராகவும்  பதவி வகித்துள்ளார்.  இவர், கடந்த 2019-ம் ஆண்டில் trues we hold என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஊக்க சக்தியாக தாத்தா திகழ்வதாகவும் கடந்த 1991-ம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு என்பதாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் . என்பதும், தங்கள் கிராமத்தை பூர்வீக பூர்வீகமாகக் கொண்ட கோபாலன் என்பவரின் பேத்தி இத்தகைய உயர்ந்த பதவிக்கு போட்டியிடுவது பற்றிய தகவல் அறிந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம்  பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம்  கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

துளசேந்திரபுரம்  கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014 ம்  ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக கோயிலை நிர்வகித்து வருபவர்கள் தெரிவித்தனர்.

மேலும் துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹரிஷ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி அவரது குலதெய்வக் கோயிலான தர்ம சாஸ்தா அய்யனார் கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடி கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனர்.

No comments

Powered by Blogger.