Header Ads

இன்றைய முக்கிய செய்திகள் 03 நவம்பர் 2020

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆழ்துளை கிணறு அமைப்பதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வைரமுத்துவுடன் ஏற்பட்ட தகராறில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* சென்னை: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியிடம் நிரப்பப்படாதவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* சென்னை சைதாப்பேட்டை சுப்புப்பிள்ளைத் தோட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமிஷனுக்காக அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதாக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே வசிக்கும் மக்களை காலி செய்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் திட்டத்தை கைவிட அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* சென்னை அடுத்த வேலப்பன்சாவடியில் சாலையை கடக்க முயன்ற கார்த்திக் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய சிமெண்ட் லாரி ஓட்டுனர் தப்பி ஓடினார். தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார். இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்

* சிவகங்கை மாவட்டத்தில் சாதியை சொல்லி அவமதிப்பதாக மறவமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்கண்ணு மீது ஒன்றிய கவுன்சிலர் நாகவள்ளி புகார் அளித்துள்ளார். ஊராட்சிமன்ற அலுவலக நாற்காலியில் அமரவிடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

* நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் எடப்பள்ளி கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகனை கொன்றதாக தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது. மகன் சக்திவேலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய பாலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* திருச்சி மணப்பாறை நகராட்சிக்கு காவிரி நீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கலிங்கப்பட்டி என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது.

* புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்துள்ளார். கார் மோதியதில் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வம், செல்வி ஆகியோர் இறந்துள்ளனர்.

* தென்காசி: குண்டாறு அணையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 20 மணி நேர போராட்டத்திற்கு பின் 15 வயது சிறுவன் ஜிப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் காவேரிப்பாக்கம் சாந்தி நகரைச் சேர்ந்த ஜெயவேலின் 11 வயது மகனும், ஆண்டாள் நகரை சேர்ந்த தாமோதரனின் 7 வயது மகனும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை கட்டைகள் மீது உற்றி தீக்குச்சியை அருகில் வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. 

இதில், எதிர்பாராதவிதமாக தீ பிடித்ததால் இரு சிறுவர்களும் காயமடைந்தனர்.  தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றிய  நிலையில், குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இருவருக்கும் 18 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருப்பது தெரியவந்ததாதால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

*தூத்துக்குடி கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரானா பேரிடர் காலத்தில் மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் பணியமர்த்த கோரியும் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

* தூத்துக்குடியில் பரோட்டா கடை உரிமையாளர் கொலை வழக்கில் ரவுடி கைது, மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

* தூத்துக்குடி அருகே தொழிலதிபரின் தாயாரிடம் 75 பவுன்நகை, பணத்தை அபகரித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

* மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கினார் மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்.

* திண்டுக்கல் பழனி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை. பான்மசாலா புகையிலை போன்ற பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக புகார் வந்ததைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.