Header Ads

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துக்கள் கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்கப்படும் - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 ✍ | -ராஜாமதிராஜ். 


திருச்சி விமான நிலையத்தில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்... இதில் ஸ்டாலின் அறிக்கை அளிக்கின்றேன் என அநாகரிகமாக அரசியல் செய்கிறார்.

கொரோனா காலத்திலும் முதலமைச்சர் களத்தில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அமைச்சர்கள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். உலகத்தில் இரண்டாம் அலை அடிக்கும் நேரத்திலும் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரொனாவால் பாதிக்கப்பட்டு 10% பேர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

துரைக்கண்ணுவிற்கு 40% இறந்த நுரையீரல் பாதிப்பு 90% மாக அதிகமானது. அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்சிகிக்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம்சாட்டுகிறார் என தெரியவில்லை. அரசையா அல்லது மருத்துவரையோ அல்லது மருத்துவ குழுவினரையா யாரை குற்றம்சாட்டுகிறார் என தெரியவில்லை.

அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சரின் மரணத்தில் அரசியல் செய்கிறார். அநாகரிகமாக பேசுவது ஏற்புடையதல்ல. ஒவ்வொருவரின் உயிர் முக்கியம்.

அன்பழகன், எஸ்.பி.பி, வசந்தகுமார் என யாராக இருந்தாலும் நேரில் சந்தித்து விசாரித்தோம். சிகிச்சை குறித்து கேட்டறிந்தோம். இதேபோன்று ஒவ்வொருவரது இறப்பிலும் சந்தேகம் என்பது குற்றச்சாட்டுவது சரியாகாது.

துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது என கூறுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
எதிர்கட்சி தலைவர் வார்த்தையை கவனமாக கையாள வேண்டும்.
இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. இதை வைத்து அரசியல் செய்கிறார். விஷத்தை அள்ளி தெளிக்கிறார். இதனை கண்டிப்பதாகவும், அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துக்கள் கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்டரீதியான வழக்கு தொடுக்கப்படும். 

மருத்துவர்கள் செவிலியர்கள் அர்ப்பணிப்பான முழு பணியாற்றி வருகிறார்கள், அனைவரும் செவிலியர்களின் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள் கிராமப்புற செவிலியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

12ஆம் தேதி வரை மருத்துவ படிப்பிற்கு யாரும்  விண்ணப்பிக்கலாம், மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் 16ம் தேதி  வெளியிடப்படும். அதன் பிறகு ஒரிரு நாளில் கலந்தாய்வு நேரில் தொடங்கி நடைபெறும். 6 - 12வரை அரசு பள்ளிகளில் படித்த, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட மாணாக்கர்கள் மட்டுமே தகுதிபெறுவர்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது ஆனால் 7.5 இட ஒதுக்கீடு பெற்று தந்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எந்த சம்மந்தமும் இல்லை.

கோவிஷ் என்ற வாக்ஸின் மூலம் 75 பேர் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதல் கட்டம் பரிசோதனை நல்லமுறையில் முடிந்துள்ளது, இதுவரையும் பக்கவிளைவும் இல்லை ஒரு மாதம் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும் அந்த நடவடிக்கையும் தற்போது நல்லமுறையாக போய்க் கொண்டுள்ளது நம்பிக்கை தருகிறது.

கோவாக்சின் அடுத்த டிரையல் செய்வதற்கு மத்திய அரசின் ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, இதுவும் தொடங்க உள்ளோம், பண்டிகை காலத்தில் முதல் கவசத்தை தவிர்க்கும் பட்சத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது, மக்கள் தீபாவளியை சுயக்கட்டுப்பாடுடன் கூடிய தீபாவளியை கொண்டாடினால் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தலாம்.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு தலைப்புகளில் தான் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது பல குழுக்களின் ஒப்புதல் பெற்று தற்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அதனால் தான் அனைவரும் பாராட்டி வருகின்றனர், எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது அது. மக்கள் கையில்தான் உள்ளது என கூறினார்.

No comments

Powered by Blogger.