Header Ads

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் -தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு மற்றும் வாசவி கிளப் இணைந்து நடத்தும் வாசல் தோறும் வசந்தம்

 ✍ | -ராஜாமதிராஜ். 


வாசால் தோறும் வசந்தம்........

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு மற்றும் வாசவி கிளப் இணைந்து நடத்தும் வாசல் தோறும் வசந்தம் என்று நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு மற்றும் வாசவி கிளப் இணைந்து நடத்திய வாசல் தோறும் வசந்தம் என்ற நிகழ்ச்சி தளிர் மரம் நடும் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்  தலைமையில் நடைபெற்ற இந்த மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகர முன்னாள் மேயர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் மக்களுக்கு மரக்கன்று வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறும்பொழுது பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை எங்கள் குழு சார்பாக நட்டுவைத்து வருகிறோம், மற்றும் ஒவ்வொரு வீடுகளுக்கும் தனியாக சென்று மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் கணக்கிற்கு 365 மர கன்றுகள் நட்டு வைத்து நிறைவு , 2020ம் ஆண்டை சிறப்பு செய்வதற்காக 2020 மரக்கன்றுகள் வீடுதோறும் வழங்குவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம் என கூறினார்.

இவ்விழாவில் சொர்க்கம், செண்பகம், மஞ்சள் வாகை, போன்ற அரிய மரக்கன்றுகளும்  மா,பலா, நாவல், சீத்தா, நெல்லி, போன்ற பழ வகை மரங்கள், வேம்பு, புங்கை, துளசி,  சிறியாநங்கை போன்ற மூலிகை மரம் ,செடிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.