சனிக்கிழமை (தீபாவளி ) அன்று அதிகாலை எழுந்து, நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சனிக்கிழமை தீபாவளி வருவதால், நல்லெண்ணெய் குளியல் மிக அவசியம். மற்ற அம்மாவாசை தினங்களில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது. ஆனால் ஐப்பசியில் வரும் அமாவாசை தீபாவளி அன்று குளிக்கலாம் காரணம் சூரியன் நீசம், எண்ணெய் - சனி, அமாவாசை - (சூரியன்- சந்திரன் சேர்க்கை ஒரே ராசியில்) நீராடுதல் சந்திரன் காரகம்.
எனவே தீபாவளியன்று நீராடுதல் எண்ணெய் தேய்த்து சனி ஆயுள்காரகம் ஆகும். தொழில் மேம்படும் ஒருவருக்கு தொழில் சிறந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும்.
நல்லெண்ணெய் குளியல் அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி தோசங்களை போக்கும்..!
ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் எனவே அதற்கு முதல்நாள் நேரத்துக்கு தூங்குங்கள்.
No comments