எண்ணூர்-மணலியில் ஆபத்தான தொழிற்சாலைகள்; காற்று மாசு விதிமுறைகளை மீறி இயங்குகின்றன
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
எண்ணூர்-மணலியில் ஆபத்தான தொழிற்சாலைகள் ஒழுங்குமுறையின் பயமில்லாமல் காற்று மாசு விதிமுறைகளை மீறி இயங்குகின்றன: நகர இளைஞர்கள் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்ட வழி ஆய்வில் கண்டறிவு.
சென்னை காலநிலை செயல்பாட்டு குழு (Chennai Climate Action Group) என்பது மாநகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இளைஞர்கள் குழு ஆகும். நவீன தொழில்மயமான வளர்ச்சியினால் சமூகத்தின் மீது, குறிப்பாக பிரதிநிதித்துவம் அல்லாத மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் உள்ள பங்குதாரர்களான எதிர்கால தலைமுறை, விளிம்புநிலை சமூகப் பிரிவினர் மற்றும் பல்லுயிரியம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆய்வு செய்வதும், அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் CCAGயின் பணிகளாகும்.
பின்னணி: எண்ணூர்-மணலியின் ஆறு பெரும் ஆபத்தான தொழிற்சாலைகள் மீதான தகவல் அறியும் உரிமை சட்ட ஆய்வொன்றில் எந்தவொரு ஆலையும் காற்று மாசுபாடு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதில்லை மற்றும் TNPCB அவைகளின் சட்டமீறல் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவும் தவறியுள்ளது என்பது கண்டறியபட்டுள்ளது. வட சென்னை பகுதியின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலந்தோசனை வழி நடத்தபட்ட இவ்வாய்வு தமிழ்நாட்டிலேயே அதிகமான ஆபத்தான ஆலைகளை கொண்ட அடர்ந்த மக்கள் குடியிருப்பு பகுதியான எண்ணூர்-மணலியில் நடத்தபட்டதால் முக்கியத்துவம் வாய்ந்து. மேலும் இப்பகுதியே புதிய ஆலைகள் அமைய குறி இலக்காக இருப்பாதாலும் இவ்வாய்வு முக்கியமானதாகும். நகரத்தின் காற்றை சுத்தப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசு ரூ. 80 கோடி நிதி ஒதிக்கியுள்ளதை பற்றியும் ஆய்வறிக்கையில் பேசப்பட்டுள்ளது.
No comments