ஒட்டக பாலில் டீ போட சொல்லி இளைஞர்கள் ரகளை.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
வடிவேலு போல ஒட்டக பாலில் டீ போட சொல்லி இளைஞர்கள் ரகளை.
புதுச்சேரியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் மூன்று பேர் பேக்கரிக்கு சென்று ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டு தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் மதிமுக பிரமுகர் செல்வராஜூம், அவரது மருமகன் நாராயணனும் பேக்கரி, டீ கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேக்கரிக்கு வந்த மூன்று பேர், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டிருக்கிறார்கள். ஒட்டகப்பால் இங்கே இல்லை என்று நாராயணன் கூறியிருக்கிறார். ஆனாலும் கடையை விட்டு செல்லாமல் ஒட்டக பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒட்டக பால் கேட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போதை இளைஞர்கள் ஆத்திரத்தில் கடையை சூறையாடிவிட்டு, கடை ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகிய மூன்று பேரும் கஞ்சா போதையில் அப்படிச்செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments