புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்த மெகா பட்டாசு கடை
✍ | -ராஜாமதிராஜ்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் அர்பன் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மெகா பட்டாசு கடை துவங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டாசு கடையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.
சிவகாசியிலிருந்து முதல் தரமான பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments