இளங்குன்னி கிராமத்தை சேர்ந்த கிளிண்டன் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின் கீழ் சடலமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
கிளிண்டன் (21), இவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, இளங்குன்னி கிராமத்தை சேர்ந்தவர். தீபாவளி சீசன் என்பதால் 3 நண்பர்களுடன் ஓசூருக்கு பட்டாசு கடைக்கு 40 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் நண்பர்களுடன் சொல்லிவிட்டு தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால் ஊருக்கு வரவில்லை என்று கிளிண்டனின் குடும்பத்தார் சொல்லுகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தின் கீழ் சடலமாக இருந்துள்ளார். இதை பார்த்த ஊர் மக்கம் கிளிண்டனின் குடும்பத்திற்கு தகவல் சொல்லி இருக்கின்றனர். அதன் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்துகின்றனர். ஊர் பொது மக்கள் 500 கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கிளிண்டன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், மூன்று நாட்களுக்கு முன் அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
No comments