Header Ads

பாரத் நெட் டெண்டர் – மீண்டும் தமிழக அரசு முறைகேடு – அறப்போர் புகார்

 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.


ரூ 2000 கோடி பாரத்நெட் டெண்டர் கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு பாரபட்சமான போட்டிக்கு எதிரான முறைகேடான ஊழலுக்கு வழிவகை செய்யும் டெண்டர் போட்டதால் அதன் மீது அறப்போர் இயக்கம் புகார் அளித்து அது ரத்தானது நாம் அறிந்ததே.

அமைச்சர் உதயகுமார் புது டெண்டர் உடனடியாக 1 மாதத்திற்குள் போடப்படும் என்றார். பாரபட்சமாக இருந்த விதிகளை  மட்டும் மாற்றி டெண்டரை உடனே மீண்டும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் TANFINET துறையோ Turnover, அனுபவம் போன்றவற்றில் பாரபட்சமாக உள்ள விதிகளை நீக்கிவிட்டு, இம்முறை வேறு சில புதிய மாற்றங்களை பாரபட்சமாக செய்து அக்டோபரில் புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.

முக்கியமாக அந்த மாற்றங்கள் Technical ஆக ரௌட்டர் போன்ற விஷயங்களில் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு சார்பாக செய்யப்படுள்ள்ளது என்பது அறப்போர் இயக்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை தொகுத்து புகாராக தமிழக அரசுக்கும், மத்திய தொலைதொடர்பு துறைக்கும், DPIIT துறைக்கும் அனுப்பியுள்ளோம். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டதை பத்திரிக்கை செய்தியில் இணைத்துள்ளேன். கிராம மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்க தமிழக அரசு முறைகேடு செய்வதை விடுத்து நேர்மையாக டெண்டர் கோர வேண்டும்.

எனவே புகாரில் குறிப்பிட்டுள்ள தேவையற்ற விதகளை அரசு நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசின் DPIIT துறை அந்த மாற்றங்களை செய்ய வைக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.