இன்றைய முக்கிய செய்திகள்
* கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு.
* இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய பரிமாணம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது - இங்கிலாந்து அதிகாரிகள்.
* வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று எங்கள் நாட்டிலும் ஏற்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா.
* பிரிட்டனில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ் - இந்தியாவில் பயம் தேவையில்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்.
* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
* யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தலைமை முடிவு செய்யும்.இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முதல்வர் பழனிசாமி இணைந்து பேசுவார்கள் - நடிகை குஷ்பு.
* பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிச.31 வரை தடை : இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு உத்தரவு.
* சாலைகளில் கண் துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன - உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன்.
* தமிழக மின்வாரியத்தை தனியார் மயமாக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை - மின்துறை அமைச்சர் தங்கமணி.
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினிக்கு 2வது சம்மன்.
* மைசூர் கல்வெட்டியல் மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை.
* அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் - சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்.
* மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் 50% டோல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பொங்கல் வரை நீடிக்கப்படும் - உயர் நீதிமன்ற நீதிபதி.
* மின்சார வாரிய பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை திரும்பப் பெறப்படும்.மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மின் துறை அமைச்சர் தங்கமணி.
* எஞ்சிய அரசாணைகளையும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் வரை மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் தொடரும் என கூட்டுக்குழு தலைவர் அறிவிப்பு.
* நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் சக நடிகர்கள் மற்றும் அண்டை வீட்டார் என ஐந்து பேரிடம் ஆர்டிஓ விசாரணை.
* 2013-ல் முடிக்க வேண்டிய ஆறு வழிச்சாலை பணியை இன்னும் முடிக்கவில்லை; எப்போது தான் முடிப்பீர்கள் - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி.
* சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்சுக்கு தனி வழி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை.
* புதிய மாறுபட்ட வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அனைத்து சர்வதேச விமான சேவைகளை ஒரு வாரத்திற்கு சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது.
* ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவை அனுமதிக்க முடியாது - பிரசாத் ஸ்டூடியோ.
* முக.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும் - நடிகை குஷ்பு.
* அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு : உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என அறிவுறுத்தல்.
* ஆன்லைன் ரம்மி தடை அவசரச்சட்டத்திற்கு எதிராக வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்.
* தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்.
* நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாணசுந்தரம் தமிழக முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
* திமுகவில் இணைந்தார் அதிமுக கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார்.
* மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
* நடிகர் சோனு சூட்-க்கு கோயில் கட்டிய தெலங்கானாவின் சித்திபெட் மாவட்ட மக்கள்.
* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ம.பி முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா (93) இன்று காலமானார்.
* பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கி உள்ளதை அடுத்து பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி.
* நெல் உற்பத்தி திறனுக்காக விவசாயிகளின் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
* இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
* இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன , 2014ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டை ஒப்பிடுகையில் தற்போது சிறுத்தைகள் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளன - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பெண்கள் பலி.
* கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுவீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம்.
* அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சங்கரன் கோவிலை சேர்ந்த 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு!
* திருவள்ளூர் ஏரிகள் நிலவரம்! சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் 806 மி.கன அடியாகவும், நீர்வரத்து - 12 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு - 3,253 மி.கன அடி, நீர்வரத்து - 165 கன அடி, நீர் வெளியேற்றம் - 120 கன அடியாக உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து - 969 கன அடி; நீர் இருப்பு 3,038 மி.கன அடி; நீர் வெளியேற்றம் - 969 கன அடி.
* பேரூராட்சிகள் முன்பு 23-ந்தேதி பாமக போராட்டம்- தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு.
* ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிப்பு. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் வெங்கடாசலபதி பேலஸில் பொதுக்குழு கூடும். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள அறிவுறுத்தல்.
* புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை - தமிழக அரசு.
No comments