Header Ads

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் மறைவு!.


* இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! -முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


* இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! - மு க. ஸ்டாலின்.

* இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரின் கரீமா பேகம் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.  தனது தாயார் மீது மிகப்பெரிய பற்று வைத்திருந்தவர் ஏ.ஆர்.ரகுமான். தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப  தனது தாய் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருந்தவர் ஏ.ஆர்.ரகுமான்.

தாயார் கரீமா பேகம் அவர்களை இழந்து வாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன். -விஜயகாந்த்.

* உயர்திரு ரகுமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை, அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். -வைகோ.

* மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.