Header Ads

லீடர் தமிழ் நியூஸின் இன்றைய முக்கிய செய்திகள்


சேலம்: விருதுநகர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி கலைச்செல்வி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மகுடஞ்சாவடியில் உள்ள கலைச்செல்வி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 9 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்தில் ரூ. 23.6 லட்சம் மதிப்பிலான 463  கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த பயணியிடம் சோதனை செய்ததில் கடத்தல்  தங்கம் பிடிபட்டது. விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 309 கிராம் தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. மூளும் துபாயில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரிடம் இருந்து 154 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: நூதன முறையில் செயலி மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். லைக், சப்ஸ்கிரைப் செய்தல் பணம் சம்பாதிக்கலாம் காட்டி இந்திய முழுவதும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் மோசடி கும்பலிடம் எமர்ந்தவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. காரில் பயணித்த பெண் உட்பட 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் ,  மேலும் 9 பேர் படுகாயம்.


கன்னியாகுமரி: ஓமனில் இருந்து விசைப்படகில் தப்பி வந்த மீனவர்களிடம் குமரி மரைன் போலீசார் விசாரணை. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் வந்து சேர்ந்தனர். குடிநீர் , உணவு மற்றும் ஊதியம் வழங்காமல் கொடுமைபடுத்தியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு.


புதுச்சேரி ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டாமல் மது பாட்டில்கள் விற்பனை தொடர்பாக மதுபான ஆலை உரிமம் ரத்து. காட்டேரிக்குப்பத்தில் இயங்கிவந்த ஆலை உரிமம் ரத்து.


கடலூர் கட்டுமான பணிக்கான மூலப் பொருட்களை எடுத்துச்செல்லும் டிப்பர் லாரிகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு.  கடலூர் மாவட்ட டிப்பர் மற்றும் டாரஸ் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு. குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜிபிஎஸ் கருவி & ஸ்டிக்கரை பயன்படுத்த நெருக்கடி தருவதாக புகார். மாவட்ட ஆட்சியரிடம் 300-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒப்படைக்கப் போவதாக அறிவிப்பு.


தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தாமரபரணி ஆற்று ஓரப்பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று தூத்துக்குடியில் ஆரம்பமானது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அடையாள அட்டை மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளனரா? என்பது குறித்த காய்ச்சல் பரிசோதனை மற்றும் அனைத்து தேர்வு எழுதுபவர்கள் வீடியோ பதிவுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தேர்வினை ரயில்வே டிஐஜி ஜெயகௌரி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.  இவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அனைவரிடமும் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்பதை சோதனை செய்து சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.


தூத்துக்குடி அந்தோணியார் புரத்திலுள்ள கோரம்பள்ளம் குளத்திற்கு தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியிலிருந்து குளிப்பதற்கு தனது நான்கு நண்பர்களுடன் சென்று குளித்து கொண்டிருந்துள்ளனர்.  நான்கு பேரில் அன்புராஜ் என்ற  28  வயது வாலிபரை காணாததால் உடன் வந்த வாலிபர்கள் தேடி பார்த்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கோரம்பள்ளம், அந்தோணியார்புரம் பகுதி பொதுமக்கள் நீரில் மூழ்கிய அன்புராஜ் உடலை தேடினர். உடலை கைப்பற்றி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக உடலை  ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. . இதற்காக 16,514 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  இவர்களுக்கு 15 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. கடுமையான சோதனைக்குப் பின்னர் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த   1,589 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.  14,925 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

No comments

Powered by Blogger.