Header Ads

லீடர் தமிழ் நியூஸின் இன்றைய முக்கிய செய்திகள்


* 8 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி.


* பொதுமக்கள் இன்று முதல் மெரினா செல்லலாம்! 10 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர் செல்ல அனுமதி இல்லை!


* அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி அருகே நேற்றிரவு குடிபோதையில் தகராறு செய்து கொண்டதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு. அதில் படுகாயமடைந்த இசக்கிராஜா (23),  ஊர் நாட்டாண்மை பாபநாசம் ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதில் அதிகாலை 3:30 மணிக்கு இசக்கிராஜா இறந்துவிட்டார். அம்பாசமுத்திரம் மருத்துவமனை மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாப்பாகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


* தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழையின் மூன்றாம் சுற்று, வரும் டிசம்பர் 24-27-ம் தேதி தொடங்கி 2021 ஜனவரி 5-ம் தேதி வரை நீடிக்கும். 2020 டிசம்பர் 24-ம் தேதி முதல் தமிழகத்துக்கு கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* தமிழகத்தில் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன.  18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 26,509 பேருக்கு வேலை கிடைக்கும்.


* விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா வந்ததால் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வரும் நிலையில் சோதனை நடத்தப்பட உள்ளது.


* அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு ஏரியில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.


* மக்கள் நீதி மையத்தின் ஆதரவு விவசாயிகளுக்கு இருக்கும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் மதுரையில் கமலஹாசன் பேட்டி.


* தலைமை செயலக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி திரு. ஷேக் மொய்தீன் இடம் மாற்றம் .  உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி திரு.ராகுல் பதவி உயர்வு அடிப்படையில் தலைமை செயலக மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நியமனம் .

No comments

Powered by Blogger.