சர்ச்சையை கிளப்பும் மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர்!
நடிகர் விஜய்யை ஆதரிப்பவர்களுக்கு, எங்கள் வாக்கு - சர்ச்சையை கிளப்பும் மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர்
2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் முக்கிய நடிகர்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்க பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள். தளபதியை ஆதரிப்பவர்களுக்கு எங்கள் வாக்கு என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களாக விஜய் படங்களுக்கும் தொடர்ந்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் பேசுவதை பல்வேறு அதிமுக அமைச்சர்கள் நடிகர் விஜய்யை விமர்சனம் செய்தும் பேசியுள்ளனர், மேலும் சர்க்கார் படத்தின் போதே நடிகர் விஜயின் கட்அவுட்களை எம்எல்ஏக்களை கிழித்து உடைத்தது அனைவரும் அறிந்தவையே.
இதனை மனதில் வைத்துக் கொண்டு விஜய் ரசிகர்கள் அதிமுக அரசை எதிர்த்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
No comments