லீடர் தமிழின் முக்கிய செய்திகள்
* முக்கூடல் பெண் சார்பதிவாளர் சி.கலாவிடம் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ 45,700 உட்பட அலுவலகத்தில் மொத்தம் 57 ஆயிரத்து 960 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்: பெண் சார்பதிவாளர், இளநிலைஉதவியாளர், அலுவலக உதவியாளர் மீது வழக்கு.
* ரூ.1,921 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழலில் ஈடுப்பட்ட அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* மேலும், தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை ப்ளாக் லிஸ்ட் செய்து, மேலும் வழங்க இருக்கும் தொகையை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தல்.
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு சிறப்பு ரயிகள் இயக்கம்.
* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஜன.12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
* தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.4,700-க்கு விற்பனை.
* அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
* தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு. இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம். ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றியை அடைய முடியும். உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது. ஏப்ரல்,மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு. திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி - முதலமைச்சர்.
* ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடத் தயார். - நடிகை குஷ்பூ.
* தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் எறிதான் பயணம் செய்ய முடியும்- அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு.
தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் நேரடி போட்டி - அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு. ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி - கே.பி.முனுசாமி. அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்பது இனிமேல் இல்லை; யார் வெளியே வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது - பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு.
* ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்.-நடிகை குஷ்பூ.
* 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது! அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வீர வாள் பரிசளிக்கப்பட்டது!
* விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் தொழிலாளி தற்கொலை. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பெருமாள் என்பவர் தற்கொலை. தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி பெருமாள் சென்னை மரக்கடையில் வேலை செய்து வந்தவர்.
* விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த பிரபல லாட்டரி வியாபாரிகள் 3 பேர் கைது அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், பிரிண்டிங் மிஷின் பறிமுதல்.
* மேடவாக்கத்தில் உள்ள மின்சார உதிரி பாகங்கள் விற்கும் கடையில் திடீர் தீப்பற்றியது தீ கொழுந்து விட்டு எரிகிறது.
* யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதற்றம். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு. பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு.
No comments