இன்றைய முக்கிய செய்திகள்
* மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது - நடிகர் கமலஹாசன்.
* அஞ்சலக கணக்கர் தேர்வுகள் இனி தமிழ் மொழியிலும் நடத்தப்படும்: மத்திய அரசு.
* கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் 417.18 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.
* STR நடிப்பில் வெளியான ஈஸ்வரன் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல் நாள் மொத்த வசூல் 3,58,60,150 ரூபாய்.
* தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல். ஊரக வளர்ச்சி துறை செயலாளரான ஹன்ஸ்ராஜ் வர்மா 1986ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
* சசிகலா குறித்து நான் தவறாக பேசவில்லை. - திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விளக்கம்.
* ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர், சசிகலா. - கோகுல இந்திரா புகழாரம்.
* எரிவாயு குழாய்கள் பதிக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர் கிராமம் மற்றும் ஆசனூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தவும், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் நிலங்களை கையகப்படுத்துவதற்குமான அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம்.
No comments